திருச்சிராப்பள்ளி பல்நோக்கு சமூகப்பணி மையம் – 26-Sep-2023

திருச்சிராப்பள்ளி பல்நோக்கு சமூகப்பணி மையம் – 26-Sep-2023

28 Sep 2023

திருச்சி செப் 26 திருச்சியில் டி.எம்.எஸ்.எஸ்.எஸ்.ன் தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டோருக்கான பகல் நேர பராமரிப்பு மையமும், தமிழக அரசும் இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாமை இன்று (26.09.2023) நடத்தியது. இதில் ரத்த அழுத்தம், எக்ஸ்ரே, இ.சி.ஜி, PPT, பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு, இலவச ஆலோசனைகள் வழங்கப்பட்டன. முகாமிற்கு திருச்சி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த தசை சிதைவு நோயால் பாதிக்கபட்ட மாற்றுத்திறனாளிகள் 20 பேர், கலந்து கொண்டனர்.

முகாமிற்கு டி.எம்.எஸ்.எஸ்.எஸ். செயலாளரும் இயக்குநருமான அருட்தந்தை. சவரிமுத்து, தலைமை தாங்கி பாதிக்கப்பட்டோர் பயிற்சிக்கு தவறாமல் வருமாறும் தன்னம்பிக்கையோடும், மன உறுதியோடும் இருக்குமாறு கூறி ஆலோசனைகள், அறிவுரைகள் வழங்கினார் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர் சந்திரமோகன் மற்றும் பிசியோதெரபிஸ்ட் மருத்துவர் ரமேஷ் பங்கேற்று வாழ்த்துரை வழங்கி Right Project கணக்கெடுப்பு பற்றி விரிவாக மாற்றுத்திறனாளர்களுக்கு எடுத்து கூறினார்கள். பிசியோதெரப்ஸ்ட்கள் பாண்டுரெங்கன், அகஸ்தினாள், சிவசக்தி ஆகியோர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.