TMSSS தொழிற்பயிற்சி மாணவர் விழிப்புணர்வு கூட்டம்

TMSSS தொழிற்பயிற்சி மாணவர் விழிப்புணர்வு கூட்டம்

28 Sep 2023

திருச்சராப்பள்ளி பல்நோக்கு சமூகப் பணி மையம் நடத்தும் கல்லூரி மாணவர் விழிப்புணர்வு திட்டத்தின் கீழ் மணப்பாறை பகுதி மஞ்சம்பட்டி புனித அருளப்பர் தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. தொழிற்பயிற்சி மைய ஆசிரியர் ஆரோக்கிய ராஜ் அனைவரையும் வரவேற்றார். திருச்சி டி.எம்.எஸ்.எஸ்.எஸ். இயக்குநரும் செயலருமான அருட்பணி. சவரிமுத்து, அவர்கள் டி.எம்.எஸ்.எஸ்.எஸ். செயல்பாடுகள் அரசுடன் உள்ள சுமுகமான உறவுகள், விழிப்புணர்வு கல்வியின் அவசியம் கால நேரத்தின் பயன்பாடுகள் குறித்து பேசி வாழ்த்துரை வழங்கினார். சி.பி.ஆர். திட்ட ஒருங்கிணைப்பாளர் சோபியா விக்டர் புற்றுநோயின் ஆரம்பநிலை, சிகிச்சை நிலைகள், அரசு சிகிச்சை மையங்கள் குறித்து பேசினார். குடும்ப நல ஆலோசகர் அருள்செல்வி வளர் இளம் மாணவ மாணவியர் பாலியல் பிறச்சனைகள், குடும்ப வன்முறைகள், குடும்ப இலவச சட்ட உதவிகள் போன்ற கருத்துக்களைப் பேசினார், கோல்பிங் இயக்க ஒருங்கிணைப்பாளர் வின்சன்ட் யூஜீன் சுற்றுப்புற சூழல் மரம் வளர்ப்பதின் அவசியம் பஞ்ச பூதங்கள் மாசுபடுதல் குறித்து பேசினார். மேற்பார்வையாளர் ஜஸ்டஸ் தனது கருத்துரையில் குடிநோய், உடல் நல பாதிப்பு, குடும்ப பாதிப்பு பொருளாதாரம் சமூதாயம் பாதிப்புகள் இவற்றிலிருந்து விடுபட மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்துப் பேசினார்.

மஞ்சம் பட்டி போதை மாற்று சிகிச்சை மைய பணியாளர் குழந்தையம்மாள் மத்திய மாநில அரசு திட்டங்கள் மருத்துவ சிகிச்சை மையங்கள், உணவு பழக்கவளக்கங்கள், உடல் ஆரோக்கியத்திற்கான பல்வேறு பயிற்சிகள் குறித்து பேசினார். தொழிற் பயிற்சி பள்ளி முதல்வர் தனது தலைமையுரையில் டி.எம்.எஸ்.எஸ்.எஸ்.ன் விழிப்புணர்வு பணிகள் மனிதமேம்பாட்டிற்கு செயல்படுத்தப்படும் பணிகள் குறித்து பேசினார். களப்பணியாளர் பவுலின் ராணி நன்றி கூற பயிற்சி நிறைவுபெற்றது. இப்பயிற்சியில் 150கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.